Mr. Saravanamuthu Povendran

Saravanamuthu Povendran

Date of Birth: 26 September 1935 - Deceased: 31 December 2025

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து புவேந்திரன் அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து - மண்டலேஸ்வரி தம்பதியினரின் (சுன்னாகம்) மூத்த மகனும்,

காலஞ்சென்ற குமாரசுவாமி - இராசம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதாகிருஷ்ணன், ராம்குமார், ராதாமோகன், சிவாவேந்திரன், கௌரி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

லிண்டா, மாரியாட்டா குளோரியா, கௌரி, காயத்திரி, காலஞ்சென்ற ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவியின் பாசமிகு சகோதரனும்,

கிப்தாஸ், மன்தாஸ், மெலிசா, டெவின், சஞ்சீவன், கீதாஞ்சலி, அபிலேஸ், ஜெகதீஸ், கிருஸ்சிகா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

ஈதனின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-01-2026 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-01-2026 ஞாயிறுறுக்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2026 00:00)