Mrs. Sarojinidevi Kanagasabai

Sarojinidevi Kanagasabai

Date of Birth: 25 November 1948 - Deceased: 24 October 2024

யாழ். காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சறோஜினிதேவி கனகசபை அவர்கள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் (ஆயுள்வேத வைத்தியர்)- கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா-பொன்னம்மா தம்பதியினரின்  அன்பு மருமகளும்,

கனகசபை (ஓய்வு நிலை விலை கட்டுப்பாட்டு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயகொளரி, தாட்ஷாயனி (ஆசிரியை), கிருபாகரன் (கணக்காளர்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

கமலதாசன் (அதிபர்) அவர்களின் மாமியும்,

தருண், பிரனீத் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஞானசவுந்தரம்மா, காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், செந்திராசா, செவ்வந்தியம்மா மற்றும் சுந்தரேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வராணி, கமலாம்பிகை ஆகியோரின் மைத்தினியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)