திருமதி. சரோஜினிதேவி முருகையா
தோற்றம்: 06 நவம்பர் 1946 - மறைவு: 12 ஆகஸ்ட் 2026
யாழ். அரியாலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சரோஜினிதேவி முருகையா அவர்கள் புதன்கிழமை 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - சுந்தரம்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களா்ன இராசதுரை - நாகம்மா தம்பதியினரின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், செல்வநாயகம் மற்றும் நீலலோஜினி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேந்தன்ராவணன் (வளவாளர் வத்துகாமம்), காலஞ்சென்ற தேவிஉதயதாரணி, அன்பரசன்சங்கிலியன் (இலண்டன்), தமிழரசன்குளக்கோட்டன் (வத்தளை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தம்பிராஜா மற்றும் கனகராஜா (பிரான்ஸ்), புனிதம்மா, காலஞ்சென்ற சீதாதேவி, வரதராஜா (கனடா), பத்மாவதி (ஓய்வுநிலை ஆசிரியை - கொழும்பு), புவனேந்திரராஜா (ராஜா - கனடா), தம்பிராஜா (ராஜூ - கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
கிருஷ்ணகுமாரி (வளவாளர் வத்துகாமம்), தர்ஷினி (இலண்டன்), வாமினி (காசாளர் வத்தளை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தாரக்யா, மோக்ஷனா, அக்சரா, விஷாகன், தணீஷ் சாய், ஆதிரா, டேஷாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் இல-16/3, ஸ்டான்லி கல்லூரி வீதி. யாழ்ப்பாணம் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியத்தின் பின் திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
