Mrs. Sarvajeevadayapari Baskaran
(தமிழ்பாட ஓய்வு நிலை ஆசிரியை - யூனியன் கல்லூரி, பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி)
Date of Birth: 25 May 1955 - Deceased: 17 September 2025
யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திருமதி. சர்வஜீவதயாபரி பாஸ்கரன் அவர்கள் தனது 70வது வயதில் 17-09-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறையடி இணைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சக்கரப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
திரு.திருமதி நடராசா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன் (கார்க்கோ நிறுவனப் பணிப்பாளர் - நிதி) அவர்களின் இல்லத்தரசியும்,
சிவானந்தராசா (சண்டிலிப்பாய் கல்விக் கோட்ட ஓய்வுநிலைப் பணிப்பாளர்), தயானந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), கிருபானந்தன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- வலிகாமம்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
சாந்தராசா (புகையிரதத் தலைமைப் பாதுகாவலர் - ஓய்வு நிலை), பிறேமாவதி கனகலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரது இல்லத்தில் 19-09-2025 சனிக்கிழமை அன்று நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
