பிரம்ம ஶ்ரீ. சர்வேஸ்வர சதானந்தசர்மா
(ஜோதிடவிற்பனர்)
மறைவு: 15 பெப்ரவரி 2025
பாரத்வாஜ கோத்திரம் யாழ். வண்ணார் பண்ணையை பிறப்பிடமாகவும், கொக்குவில் மாத்தனையை வசிப்பிடமாகவும் தற்போது கோண்டாவில் வசித்து வந்த பிரம்மஶ்ரீ. சர்வேஸ்வர குருக்கள் சதானந்த சர்மா 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாத்தனை சர்வேஸ்வர குருக்கள் - சாரதாம்பாள் தம்பதியினரின் மூத்த மகனும், மயிலனி சர்வேஸ்வர குருக்கள் - மனோன்மணி அம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
கால்சென்ற ருக்மணி தேவி அவர்களின் அன்பு கணவரும்,
ஸ்ரீதர ஷர்மா, சாந்தினிதேவி, காலஞ்சென்ற சந்திரா, ஈஸ்வர சர்மா ஆகியோரின் தந்தையும்,
அன்பரசி, வனஜா ஆகியோரின் மாமனாரும்,
நிவேதா, கவிதா, றமேஷ், லலித்யா, சிவராம் ஆகியோரின் பேரனும்,
பாலநாகேஸ்வரி, ரஞ்சிதானந்த சர்மா, காலஞ்சென்ற பராசக்தி, ஏரம்பநாத சர்மா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் கோண்டாவிலில் அமைந்துள்ள அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோண்டாவில் கட்டையால்லடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
