திருமதி. சசிதேவி சிவக்கொழுந்து

சசிதேவி சிவக்கொழுந்து

தோற்றம்: 03 ஜனவரி 1963 - மறைவு: 16 ஜூலை 2024

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15, காக்கைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சசிதேவி சிவக்கொழுந்து அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா-மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

திருநெல்வேலி கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பு-தங்கம்மா தம்பதியினரின் மருமகளும்,

சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சுதன், சுயந்தினி ஆகியோரின் அன்பு தாயாரும்,

குசலனின் மாமியாரும்,

பார்வதிதேவி, சாந்தவடிவேல், சுமதி ஆகியோரின் சகோதரியும்,

லோகேஸ்வரன், தயா, ஶ்ரீவீரேஸ்வரநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 69/212, காக்கைதீவு, கொழும்பு-15 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-07-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2024 04:00)