திருமதி. சசிகலா கோபால்

சசிகலா கோபால்

தோற்றம்: 14 செப்டம்பர் 1957 - மறைவு: 31 ஆகஸ்ட் 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை சென் லூசியாள் ஒழ்ஙகையைச் சேர்ந்த திருமதி. சசிகலா கோபால் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஷ்வரட்ணம் - பத்மாவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

பூண்டுலோயாவைச் சேர்ந்த காலஞ்சென்ற கிருஷ்ணசாமி - பெரியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

கோபால் (Eastern Trading Company, Colombo-12) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசன்னா, விக்கினேஸ்வரி, சசிதரன் ஆகியோரின் தாயாரும்,

நளினி, பிரியதர்ஷினி, சுபோதினி, யாமினி (பிரான்ஸ்), காயத்திரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்களராஜ் (கனடா), விஜயரட்ணம் (பிரான்ஸ்), சிறிதரன், சுப்ரமணியம், சிவாஜி ஆகியோரின் மைத்துனியும்,

சுதர்ஷினி, திவ்வியசாளினி, கதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோதண்டராமன் - கற்பகம், காலஞ்சென்ற உமாபதி - சுலகஷ்னா, பொகந்தலாவைச் சேர்ந்த காலஞ்சென்ற பெரியசாமி - பாப்பாத்தி ஆகியோரின் சம்பந்தியும்,

வித்தியாதரன் (கனடா), கிரிஷானி (கனடா), லேக்கா (பிரான்ஸ்), அஷ்வந்த் (கனடா), பிரியகரி (பிரித்தானியா), ஷக்கீந்தர் (கட்டார்), அசிக்கா, சத்து (கட்டார்), அபிராமி ஆகியோரின் பெரியம்மாவும்,

சாந்தி பாலசுப்பிரமணியம், மஞ்சுளா பாலச்சந்திரன், ரட்ணா, சிவானந்தன், காலஞ்சென்ற பிரேமா கணேசன், ரட்ணநாதன், சுதர்ஷன், சரவணமுத்து, ஆகியோரின் தந்தைவழி மைத்துனியும், 

காலஞ்சென்ற செல்வநாயகி, நாகபூஷணி, கிருஷ்ணவேணி ஆகியோரின் தாய்வழி மகளும்,

காலஞ்சென்ற யோகராஜா, நடராஜா ஆகியோரின் தாய்வழி மருமகளும்,

சொனக்ஷ், தியோனன், அக்ஷரா, கிருத்திக்ஷன், நேத்தன், தீஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2025 புதன்கிழமை அன்று பிற்பகலா 3:00 - 4:00 மணி வரை இல-09, மீராணியா வீதி, கொழும்பு-12 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2025 04:00)