திருமதி. சசிகலா பவளலிங்கம்
தோற்றம்: 10 அக்டோபர் 1967 - மறைவு: 27 ஜூலை 2025
யாழ். மாவிட்டபுரம் வீதி, கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சசிகலா பவளலிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நரசிங்கம் - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும், கந்தையா - காலஞ்சென்ற முத்துமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பவளலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பியங்கா (தாதிய உத்தியோகத்தர் - யாழ்.போதனா வைத்தியசாலை), சோபியா (வைத்தியர்), ஸியானுகா (மருத்துவ மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அர்யுன் (துர்க்கா மோட்டோர்ஸ் உரிமையாளர் - சுன்னாகம்) அவர்களின் பாசமிகு மாமியும்,
தேம்பாமலர், ஸ்ரீகாந்திதாசன், சுபோதினி, கேமமாலினி, கெங்காசுதன், கௌரிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-07-2025) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்று, உடலம் செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
