Mrs. Sasireka Mahendran

Date of Birth: 16 July 1970 - Deceased: 13 January 2025
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சசிரேகா மகேந்திரன் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை - புஸ்பமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் (புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி- Sri வேல்முருகன் Store) - புஸ்பராசமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மகேந்திரன் இராசலிங்கம் (செட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. ராஜ்விக்கிரம் (ராஜி), ஜெனுபா (சாரா), சரத்சேரன் (சேரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிமேஸ் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சசிகலா (ஐக்கிய அமெரிக்கா), ரமேஸ் (கனடா) ஆகியோரின் சகோதரியும்,
ரவீந்திரன் (ஜேர்மனி), வான்மதி (ஜேர்மனி), இளமதி (இலண்டன்), வளர்மதி (ஜேர்மனி), சிவமதி (கனடா), தவமதி (சுவிஸ்), சதாமதி (ஜேர்மனி), கோபு, லிங்கேஸ்வரி, சிவநேசலிங்கம், திரிபுவனராஜா, சிறிநாதன், ரூபன், சிவா (சிறுவன்), சதிஸ், கலாநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-01-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 7:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
