திருமதி. மகேஸ்வரன் சுசிலாதேவி

மகேஸ்வரன் சுசிலாதேவி

மறைவு: 27 பெப்ரவரி 2024

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திருமதி. மகேஸ்வரன் சுசிலாதேவி அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-03-2024 சனிக்கிழமை 3.00 Pm - 4.00 Pm மற்றும் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை 3.00 Pm - 4.00 Pm ஆகிய தினங்களில் 95 rue Marcel Sembat 93430 Villetaneuse எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-03-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.15 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 12.00 - 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2024 05:00)