Mr. Sathasivam Ramachandran

(இளைப்பாறிய சுங்கப் பணிப்பாளர்)

Sathasivam Ramachandran

Date of Birth: 27 December 1944 - Deceased: 20 January 2025

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் ராமச்சந்திரன் அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று தனது இல்லத்தில் (12/3, பிரான்சிஸ் வீதி, கொழும்பு-06) இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரன் (அவுஸ்திரேலியா), பவன் (கனடா), வித்தியா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆஷா, பாமதி, கல்யாண் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இந்திராணி, கலாவள்ளி, கீதா, பத்மநிதி, வசிஹரி, தயாநதி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சிறிகாந்தன், சிவமகாதேவா மற்றும் தனேஸ்வரன், கௌரி, ரட்ணகுமார், திருமகள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவாணி, தீபிகா, ஹரிஸ், ஹரணி, ஆரியா, சிறேயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 22-01-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-01-2025 வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2025 05:00)