திரு சதாசிவம் சண்முகலிங்கம்

(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர் - வவுனியா)

சதாசிவம் சண்முகலிங்கம்

தோற்றம்: 22 டிசம்பர் 1949 - மறைவு: 22 ஜனவரி 2024

யாழ். பொலிகண்டி நம்பித்தாவத்தையைச் சேர்ந்த திரு. சதாசிவம் சண்முகலிங்கம் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சதாசிவம் - பொன்னுக்கண்டு தம்பதியினரின் செல்வப் புதல்வரும்,

காலஞ்சென்ற மீனாட்சி சுந்தரம் - தங்கமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

பத்மலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன் (நிதிக்கட்டுப்பாட்டாளர் - Global Vinyl (Pvt) Ltd), வாசுகி (ஆசிரியர் - பம்பலப்பிட்டி St. Marys Tamil Maha Vidyalayam), கஸ்தூரி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தாரணி (முகாமையாளர் - இலங்கை வங்கி இரத்மலானை), உமாமகேசன் (பொறியியலாளர்), கௌரிசங்கர் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தஸ்விதன், கோபிகன், பிரதிக்‌ஷா, அபிலோஜன், ஹரிஷ், நிதிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமரா் கணேசலிங்கம், சுந்தரலிங்கம் (ஜேர்மனி), அமரா் யோகலிங்கம், தேசோமயானந்தம், கௌரிதேவி, கலாராணி யோகேஸ்வரன் (ஆசிரியர் - வல்வை மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, சறோஜினி, தேசோமயானந்தம், யோகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

சிவசெல்வநாதன், சொர்ணகாந்தரூபி, தேசிங்கராணி, அமரா் மீனலோகினி, ஜெயமணி, வளர்மதி, அமரா் சிவசெந்திவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நடராஜா, விஜியகுமார், செல்வநேசன், சிவநடராசா, குகனொளி, பவானி, பவனேஸ்வரி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் காலை 9.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2024 05:00)