திரு. சதாசிவம்பிள்ளை ஜெகதீஸ்வரன்
தோற்றம்: 01 அக்டோபர் 1942 - மறைவு: 17 செப்டம்பர் 2025
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி - கல்வயல் மற்றும் வௌ்ளவத்தையை வசிப்பிடாகவும் கொண்ட திரு. சதாசிவம்பிள்ளை ஜெகதீஸ்வரன் அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சதாசிவம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
சுந்தரம்பிள்ளை - பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
குருபரன், பிரேம்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிருபா, மகிஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரி, லோகேஸ்வரன், சிவநாதன், குகநாதன், சிவராணி, காலஞ்சென்ற தவமணிதேவி, சிவகலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீரன், ஆரன், ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
