திருமதி. சத்தியசோதி குணசீலன்

சத்தியசோதி குணசீலன்

தோற்றம்: 25 மே 1974 - மறைவு: 05 ஜூன் 2025

யாழ். கைதடியை பிறப்பிடமாகவும் கனடா - கெஸ்விக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியசோதி குணசீலன் 05-06-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் கந்தையா - இராஜேஸ்வரி சிதம்பரநாதன் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா - மங்கையர்க்கரசி தம்பதியினரின் அருமை மருமகளும்,

குணசீலன் தியாகராஜா (Tatlows Broiler Bar & Restaurent) ஆசை மனைவியும்,

அக்‌ஷியாவின் அருமை தாயாரும்,

வரன் நாதன் (வீடு விற்பனை முகவர்) ஆகியோரின் ஆசைமிகு சகோதரியும்,

ஞானசீலன், சுதா, லதா, கவிதா, அருள்மதி வசந்தா, காலஞ்சென்ற சிவதாசன், ரவி ஆகியோரின் அருமை மைத்துனியும்,

உஷ்மிதா, சிஷ்யா, லக்ஷியா, அபிநயா, சாருகா, நர்த்தகி , ஜானுஜன் தக்‌ஷன், அவினேஸ், சர்மிகா ,கிஷேன், ஞானவர்மன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமையும், 09-06-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 WoodBine Ave Markham) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2025 04:00)