Mrs. Sathiyabama Satgurunathan

Sathiyabama Satgurunathan

Date of Birth: 18 August 1937 - Deceased: 03 August 2026

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, மஸ்கட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சத்தியபாமா சற்குருநாதன் அவர்கள் 03-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஜயா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லதுரை - கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கமலாதேவி, ருக்மணி, கருணாநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற வைத்திய கலாநிதி சற்குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

இரவீந்திரநாதன் (ரவின்-அமெரிக்கா) அவர்களின் அன்புத் தாயாரும்,

சுதர்ஷினி (சுதா) அவர்களின் அன்பு மாமியாரும்,

நிலா, தரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

கங்காதரன், தாமரா, அன்னலட்சுமி (பவராசா), ஜெயலட்சுமி (சட்டநாதன்), வைத்திய கலாநிதி. கமலநாதன் (வைத்திய கலாநிதி ஆனந்தி), அருமைநாதன் (அருந்தவராணி), மகாலட்சுமி (சுப்பிரமணியம்), ஜெகநாதன் (ரமணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 - 4.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/08/2026 00:00)