Mrs. Sathiyabama Sathiyabalan

Sathiyabama Sathiyabalan

Date of Birth: 24 July 1943 - Deceased: 06 October 2026

கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சத்தியபாமா சத்தியபாலன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முகாந்திரம் முத்துகுமாரு - நவமணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் - அமிர்தநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சத்தியபாலன் (Retired Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவா்களான தனபாலசிங்கம், ராஜசிங்கம் (கனடா), பாலத்திராசன் (இலண்டன்), பத்மநாதன் (Regional Manager, Peoples Bank, இலண்டன்), சாரதாம்பாள், சந்திரபதி மற்றும் நந்தபாலன் (Retired Teacher, இலண்டன்), காலஞ்சென்றவர்களான சசிலாதேவி (இலண்டன்), சோமகாந்தன் சாமினி சுகாதினி (Retired Social Development Officer) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற இந்திரபாலன் (Retired Electrical Superintendent, Nervy), ஜெயபாலன் (Retired Electrical Superintendent, CEB), சுதந்திராதேவி, ரங்கபாலன் (Retired Principal), சந்திரபாலன் (Senior Management Assistant), சிவபாலா (Retired Teacher, கனடா), காலஞ்சென்ற உதயபாலன் (Dispenser), இதயபாலன் (Dispenser) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலயூசணி (கனடா), விமலாதேவி (கனடா), Dr. சிரோன்மனி (Consultant Psychiatrist, இலண்டன்), மல்லிகா பாலாதாசன் (Retired Pharmacist), சாந்தினி (Retired Teacher) ஆகியோரின் மைத்துனியும், 

காலஞ்சென்ற தனாம்பிகை, நித்திக்காதேவி, தயாவதி, Mrs. தமயந்தி சந்திரபாலன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

Dr. சுகிதரன் (கொழும்பு), Eng. சஞ்தீவன் (இலண்டன்), நிருபா ஆகியோரின் அன்பு தாயும்,

Dr. சிவாதி (Consultant Anesthetist, Colombo), சர்மினி (NHS, UK) ஆகியோரின் அன்பு மாமியும்,

சாத்விகன், சாத்விகா, மிதுன், அஸ்வி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இல- 60, புனித மரியான் வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-10-2026 வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சகிதான் (மகன்):- +94 70 111 1786
சஞ்சீவன் (மகன்):- +44 744 366 8479

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2026 00:00)