திருமதி. சத்தியபாமா சிவசுப்பிரமணியம்
மறைவு: 30 செப்டம்பர் 2024
யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியபாமா சிவசுப்ரமணியம் அவர்கள் 30-09-2024 திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தனது 78 வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசுப்ரமணியம் (சரசாலை மணியம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சந்திரரூபன் (ரூபன்-வட மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30-09-2024 திங்கட்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (நாவலர் சனசமூக நிலைய வீதி, அச்சுவேலி தெற்கு அச்சுவேலி) நடைபெற்று, முழக்கன் மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்த லை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
