Mrs. Sathiyabama Sriranjan

Sathiyabama Sriranjan

Date of Birth: 27 January 1972 - Deceased: 16 May 2025

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு -15, முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியபாமா ஸ்ரீரஞ்சன் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று வைகுண்ட பிராப்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் - நிர்மலாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - சொர்ணம் தம்பதியினரின் மருமகளும்,

ஸ்ரீரஞ்சன் (பிரிலியண்ட் பிரின்டர்ஸ்) அவர்களின் ஆசை மனைவியும்,

ஸ்ரீ கிருஷோத்தன், ஸ்ரீ விசாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கார்த்திகன், யோகிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலாரஞ்சனி, ஜெயரஞ்சனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-05-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/05/2025 04:00)