Mrs. Sathiyaluxmy Raththinam
Date of Birth: 26 March 1947 - Deceased: 24 May 2026
யாழ். காரைநகரினைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை - உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சத்தியலக்ஷ்மி இரத்தினம் அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராசா-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா-இலட்சுமி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி ஃபுளோரா, பாலசரஸ்வதி மற்றும் பாக்கியலக்ஷ்மி, புத்திரசிகாமணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகம்மா, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,
விஜயகுமார் (இலங்கை மின்சார சபை), வசந்தகுமார் (இலண்டன்), விநோதினி (தொழிற் திணைக்களம்), வசந்தினி (ஆசிரியை - புனித மரியாள் கல்லூரி), துஷ்யந்தினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாரி செலஸ்டீன் (ஓய்வு நிலை இலங்கை மின்சார சபை), பிரஷாந்தி (இலண்டன்), குமணன் (மாகாண திட்டமிடல் செயலகம்), லிங்கராஜா (ஓய்வுநிலை ஆசிரியர்), ரஜனிகாந்தன் (கனடா) ஆகியோரின் மாமியாரும்,
அபிஷயனி-லவீன் அபிஷாந்த், ஸிந்தூரினி, வித்யாஷினி, கோபிகேஷன், கிருஷிகேஷன், ஆரவ், அஸ்மி, யாதவ், அனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிருபன் (கனடா), நிரோஷன் (அவுஸ்திரேலியா), செல்வகுமார், சிவாஜினி, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சரவணன், பிரணவன், இராகுலன், முகுந்தன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருகோணமலை இந்து பொது மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
