திருமதி. சத்தியாம்பிகை கதிர்காமநாதன்
தோற்றம்: 27 பெப்ரவரி 1965 - மறைவு: 01 மே 2026
யாழ். சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியாம்பிகை கதிர்காமநாதன் அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னையின் திருவடியைச் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சத்தியசீலன் - கன்னிகா பரமேஸ்வரி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், மகேஸ்வரி நாகலிங்கம் அவர்களின் செல்லப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா - சந்தானலட்சமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பவித்திரன், வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிலாசா, ஜெனிசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மலோசனி, சத்தியலோசனி, சத்தியவேணி, காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, சத்தியகுமார், சத்தியபவான் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற உமாதேவி அவர்களின் மைத்துனியும்,
நவதாஸ் அவர்களின் சகலியும்,
லோகேந்திரலிங்கம், சுதந்திரகரன், காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம், சாந்தினி, சுகிர்தா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 06-05-2026 புதன்கிழமை காலை 9:30 - 11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கதிர்காமநாதன் (நாதன்-கணவர்):- +1 416 724 5044
பவித்திரன் (மகன்):- +1 647 980 5044
www.tamilthakaval.org
