திருமதி. சத்தியாம்பிகை (பாமா) கதிர்காமநாதன்
மறைவு: 01 மே 2026
யாழ். சுருவில் ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியாம்பிகை கதிர்காமநாதன் அவர்கள் 01-05-2026 அன்று இறைவன் திருவடி சேர்ந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்-கன்னிகா பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்
காலஞ்சென்ற மகேஸ்வரியின் அன்புப் பெறாமகளும்
காலஞ்சென்றவர்களான நடராஜா - சந்தானலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்
கதிர்காமநாதன் அவர்களின் அருமை மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05–05-2026 செவ்வாய்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 வரையும் 06-05-2026 புதன்கிழமை காலை 9:30 - 11:00 மணி வரையும் 8911 Woodbine Ave. Markham ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
