திரு. சத்யவான் அசோகேந்ரா

(Retired Director of Finance, Atlantis -The Palm Jummeirah, Dubai)

சத்யவான் அசோகேந்ரா

தோற்றம்: 30 ஆகஸ்ட் 1964 - மறைவு: 09 ஏப்ரல் 2026

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, டுபாயை வசிப்பிடமாகவும், இல- 17, துவரியர் ஒழுங்கை, தெல்லிப்பழையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்யவான் அசோகேந்ரா அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்யவான்-ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற ஜெயசீலன்-தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

ருத்ராங்ஷியின் பாசமிகு தந்தையும்,

ஹரிநாத் பாலேந்திரா (அவுஸ்திரேலியா), குகேந்திரன் (அவுஸ்திரேலியா), ரேேணுகா லிங்கேஸ்வரி (அவுஸ்திரேலியா), சாந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2026 00:00)