திருமதி. சத்தியபாலதேவி சிற்றம்பலம்

சத்தியபாலதேவி சிற்றம்பலம்

தோற்றம்: 14 டிசம்பர் 1934 - மறைவு: 12 டிசம்பர் 2024

யாழ். தொல்புரத்தை பிறப்பிடமாகவும், மலேசியா, கொட்டடி,  Scarborough - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியபாலதேவி சிற்றம்பலம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-இராசம்மா தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் (விசக்கடி வைத்தியர் மற்றும் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன், சிறிமதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசக்தி (கனடா), சிவகுமார் (கனடா), கதிரவேலு (இலண்டன்), சிவானி (இலண்டன்), சிவநாதன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலகிருஷ்ணன் (கனடா), கருணா (கனடா), தாட்சாயிணி (இலண்டன்), சக்திவேல் (இலண்டன்), தயாழினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தமிழினி, ஜோதினி, கார்த்திகாயினி, சாயீசன், அனுசன், அபிநயா, ஜேம்ஸ், அபிராமி, தீபோ,  சயந்தன், கரிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரணவன், மகேஸ், கிருத்திகா, யனுஸ், கனிஸ், அலிசா, ஆரியன், அர்ச்சுன், விஷ்ணு ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 - 10:00 மணி வரையும், 16-12-2024 திங்கட்கிழமை நண்பகல் 12:30 - 1:30 மணி வரையும்  Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,  தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, North Toronto Crematorium (2 Stalwart Industrial, Dr Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2024 05:00)