Mrs. Sathyagnanalaxmy Indrarajah

Sathyagnanalaxmy Indrarajah

Date of Birth: 21 August 1947 - Deceased: 08 March 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை பன்னாலையை சொந்த இடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியஞானலட்சுமி இந்திரராஜா அவர்கள் 08-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் மாணிக்கம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் மருமகளும்,

சுழிபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இந்திரராஜா (விக்ரோறியாக் கல்லூரி பிரதி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வெற்றிவேல், இரத்தினசிங்கம், சத்தியபாமா, சத்தியமூர்த்தி மற்றும் திருநாவுக்கரசு, சத்தியபாலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதீஷ்வரன், லோஜினி ஆகியோரின் அன்பு ஆசையம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2024 05:00)