Mrs. Sathyavani Krishnasamy
Date of Birth: 17 March 1941 - Deceased: 16 March 2026
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், இலண்டன் - இங்கிலாந்து, Brampton - கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி. சத்தியவாணி கிருஷ்ணசாமி அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று Brampton நகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தீருவில் தங்கனம்மாவின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை - கோதண்டநாயகி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகநாதர் - கனகம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி அவர்களின் நேசமிகு துணைவியும்,
சாந்திமதி, இந்துமதி, நித்யா ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சரவணபவன் (பவன்), ராஜ்குமார், முகுந்தன் ஆகியோரின் மதிப்புமிகு மாமியாரும்,
பிரகாஷ், ஆகாஷ், சந்தோஷ், சர்வேஷ், ஐவன், ஆறன் ஆகியோரின் அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், மனோகரன் மற்றும் கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற நிர்மலா, பத்மா, பத்மினி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, குமாரசாமி (ஞானப்பிரகாசம்), சோமசுந்தரம், மல்லிகாதேவி, புண்ணியமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற பல்லவநம்பியின் பெரியம்மாவும்,
நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், ஊர்மிளா, பிரசன்னா, சனோமியா ஆகியோரின் பெரியமாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 - 12.30 மணி வரை Lotus Funeral and Cremation Center (121 City View Drive, Toronto, ON M9W 5A8) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
