Mrs. Satkunadevi Balasubramaniam
Deceased: 31 August 2024
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சற்குணதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன்-மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,
கோவிந்தபிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன் (பொறியியலாளர்-ஐக்கிய இராச்சியம்), கௌரி (ஓய்வுபெற்ற உப பீடாதிபதி-தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி), மதுராந்தகி (ஆசிரியை-நோர்வே), மணிமாறன் (பொறியியலாளர்-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயதேவி, முரளிதரன், சண்முகநாதன், அஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிராமி, காயத்திரி, துவாரகா, ஆருதி, அவ்னி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
பாலசுப்பிரமணியம், சாந்தமூர்த்தி (ஐக்கிய இராச்சியம்), ஜெயக்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாதேவி, மனோன்மணி மற்றும் அரியநாயகம், அமிர்தகுலசிங்கம், வரதராசமூர்த்தி, செல்வக்காந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 02-09-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 5.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
