திருமதி. சற்குணம் கோபாலபிள்ளை

சற்குணம் கோபாலபிள்ளை

தோற்றம்: 24 டிசம்பர் 1940 - மறைவு: 02 அக்டோபர் 2026

யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சற்குணம் கோபாலபிள்ளை அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - வள்ளியம்மை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை (Bombay Store - கொழும்பு, Maniyam Store - புங்குடுதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

காண்டீபன் (Gopal & Co - Paris), மணிமாறன் (Gopal & Co - பிரான்ஸ்), வளர்மதி (கனடா), மணிவண்ணன் (ரவி, பிரான்ஸா), மதிவாணன் (கோபு, AAyini SAS, Air sun SAS, Ganesan SAS - பிரான்ஸ்), நீலவண்ணன் (நீலன், பிரான்ஸ்), முரளிதரன் (The Pizza, இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிச்சந்திரன் (முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), பவானிதேவி (MBBS), மலர்விழி, மாலிகா, பத்மகௌரி, சுபர்ணா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, நாகேசு, பராசக்தி, பசுபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை (ஆசிரியர்), சிவபாக்கியம், கிருஷ்ணப்பிள்ளை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கருணாகடாட்சம், கருணாகரன், புவனேஸ்வரி, தியாகராஜா, கவிஞர் வில்வரெட்ணம் மற்றும் பரமேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கவின், கவிசன், அவனிக்கா, கிஷோ, அஞ்சுகி, அஸ்மிதா, ஐதுசன், ஆழினி, ஆதுளன், ஆரபி, ஆரணன், ஆருரன், ஆயினி, அஸ்விதா, அபீஸ்மன், நிதுசன், ஆதுரி, தாரிகன், அபிசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-10-2026 புதன்கிழமை பிற்பகல்14:30 - 16:30 மணி வரையும் Crématorium des Joncherolles Villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-10-2026 வியாழக்கிழமை காலை 9:00 - 11:00 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரவிச்சந்திரன் (மருமகன்):- +1 647 606 4252
காண்டீபன் (மகன்):- +33 618 175 699
மணி (மகன்):- +33 679 847 963
ரவி (மகன்):- +33 746 186 629
கோபு (மகன்):- +33 662 790 666
நீலன் (மகன்):- +33 695 113 770
முரளி (மகன்):- +94 77 201 7824

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2026 00:00)