திருமதி. சற்குணராஜா பத்மாவதி

சற்குணராஜா பத்மாவதி

தோற்றம்: 21 டிசம்பர் 1935 - மறைவு: 21 நவம்பர் 2025

யாழ். சங்கானை மேற்கு, பண்டத்தரிப்பு வடலியடைபைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சற்குணராஜா பத்மாவதி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - மகேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், 

காலஞ்சென்ற சற்குணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கமலாவதி, சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீஸ்கந்தராஜா, சுவேந்தினி, காலஞ்சென்றவர்களான ஜெயராஜ், தேவராஜா மற்றும் சுமதி, செல்வராஜா, யோகராஜா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

வத்சலா, இளங்கோவன், உமாகரன், தர்சினி, பாமினி ஆகியோரின் மாமியாரும்,

ஏஞ்சலா, கஜன், போல், நவநீதன், ஸ்ரீவர்மா, ஆர்த்திகா, பற்றிக், ராதிகா, கஜானா, சரண், நேகன், நிருண் ஆகியோரின் பேத்தியும்,

எலியாசின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2025 00:00)