திருமதி. சாவித்திரிதேவி கணேசலிங்கம்
மறைவு: 01 செப்டம்பர் 2024
யாழ். அரசடி வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரிதேவி கணேசலிங்கம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி (இளைப்பாறிய மாநகரசபை உதவி அதிகாரி)-விஜயம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிறாப்பர் கந்தையா-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் (இளைப்பாறிய உப அதிபர்-யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஈஸ்வரப்பிரியா, கிரீஷன் (ஆசிரியர்-சென் ஜோன்ஸ் கல்லூரி), Dr. கீர்வாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஜானனன், கோசலை, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாமநயனா, ஹரி, ஈர்த்தன் கிருத்விகன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-09-2024 திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
