திரு. செபஸ்தி அல்ஸ்ரன்
(ஓய்வு பெற்ற அலுவலகப் பணியாளர் பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்)
தோற்றம்: 04 ஜூலை 1950 - மறைவு: 07 செப்டம்பர் 2025
யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செபஸ்தி அல்ஸ்ரன் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தி - றோசமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சின்னகிளி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆன்சிந்துஷா, ஆன்அனோபியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன், விஜீவராஜ், நித்தியராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அவனிதன், அவந்திக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மேரியோசே, மரிஸ்ரெலா, வில்லியம் ஆகியோரின் இளைய சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க வழிபாடுகள் 10-09-2025 புதன்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்று, சரீரம் காக்கைதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
