Mr. Seenivasakam Nadarajah (JP)
(Ex Postal Staff Officer, Head Office, Colombo)
Date of Birth: 26 October 1937 - Deceased: 27 August 2024
கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சீனிவாசகம் நடராஜா அவர்கள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம்-கதிராம்பாள் தம்பதியினரின் மகனும்,
வத்சலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,
ஜெயகாந்தன், ஜெயகௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவாநந்தன், பிரேமா ஆகியோரின் மாமனாரும்,
சங்கரி, கிருத்திகா, கௌசல்யா, சாத்விகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 28-08-2024 புதன்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நண்பகல் 12.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-08-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 12.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
