திருமதி. சீதாபாதி (சீதா) தில்லைநாதன்

சீதாபாதி (சீதா) தில்லைநாதன்

தோற்றம்: 17 ஜூன் 1942 - மறைவு: 20 ஆகஸ்ட் 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீதாபதி தில்லைநாதன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமசாமி-நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், 

தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

இராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், காலஞ்சென்ற சத்தியபாமா ஆகியோரின் அன்பு அக்காவும், 

லதிகா, ரேணுகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சற்குணேஸ்வரன், திவாகரன், சுரேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரூபினி, ரிக்கேஷ், தட்சாயினி, சிவப்பிரியன், சிவப்பிரியா, நவரோஜ், வினோஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சவ்ஹாரா, ஆதிரன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 21-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் 38A, Shrubbery Gardens, Colombo-04 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-08-2024 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/08/2024 04:00)