திரு. சீவரத்தினம் விஜயகுமார்

சீவரத்தினம் விஜயகுமார்

மறைவு: 05 டிசம்பர் 2024

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சீவரத்தினம் விஜயகுமார் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சீவரத்தினம்-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவாஜினி (சிவா-பிரான்ஸ்) பாசமிகு கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
"சிவசக்தி இல்லம்"
நெத்தாசி லேன், வட்டுகிழக்கு,
வட்டுக்கோட்டை.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2024 05:00)