திரு. சீவரத்தினம் ஆழ்வார்
(இளைப்பாறிய துணை அதிபர், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்)
தோற்றம்: 10 மார்ச் 1932 - மறைவு: 17 பெப்ரவரி 2023
யாழ். அல்வாய் சத்திரம்சீமாவைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Sokoto, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீவரத்தினம் ஆழ்வார் அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வார், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
அழகம்மா (பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், காத்திகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தா(கனடா), ஜெயந்தகுமார்(கனடா), கீதா(கனடா), உதயகுமார்(கனடா), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நேரு (கனடா), உமாசந்திரிகா (கனடா), சுதாகரன் (கனடா), சரோஜினிதேவி (பிரித்தானியா), பத்மநாதன் (பிரான்ஸ்), பாலேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற அனுசியா மற்றும் சிறிகாந்தன் (இலங்கை), காந்தரூபன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா (கனடா), விதுசன் (கனடா), பிரணவன் (கனடா), அக்சனா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சிவகுரு மற்றும் இரத்தினாவதி(இலங்கை), மேரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி மற்றும் துரைராஜா(கனடா) சுசீலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பன்னீர்ச்செல்வன்(இலங்கை), காஞ்சனா(இலங்கை), பிரபாகரன்(கனடா), பிரஜீவ்(கனடா), பிரதீபா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சாந்தி(பிரான்ஸ்), தேவி(இலங்கை), பிரியா(இலங்கை), நிர்மலன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
Live Streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
