திரு. செல்லையா கார்த்திகேசு

செல்லையா கார்த்திகேசு

தோற்றம்: 30 ஆகஸ்ட் 1941 - மறைவு: 28 ஜனவரி 2025

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, Scarborough - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா கார்த்திகேசு அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற அகிலநாதன், ஸ்ரீகுணநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயபாரதி (கௌரி), காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஈஸ்வரி, சின்னையா, சோதிப்பிள்ளை, இராசையா மற்றும் பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலியுகவரதன், யோகேஸ்வரன், தேவநாயகி, காலஞ்சென்ற கோகிலவதனி, சகுந்தலாதேவி, குமுதாதேவி, சந்திரவதனி, நந்தினி, சரவணபவான், பவானி, வசந்தகுமார் ஆகியோரின் மைத்துனரும்,

சயானா, அஸ்வினா, கிருஷானா, பிரகதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-02-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 1:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம்.

 தகவல்:- குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2025 05:00)