Mr. Sellaiah Ponnusamy

(தினக்குரல் பத்திரிகை, நோர்தேன் சென்றல் வைத்தியசாலை ஸ்தாபகர்)

Sellaiah Ponnusamy

Date of Birth: 01 January 1936 - Deceased: 19 February 2025

யாழ். வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், செட்டித்தெரு லேன், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா பொன்னுசாமி அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Founder, Chairman - Northern Central Hospital (Pvt) Ltd, Northern Publications (Pvt) Ltd,

Northern Beach Hotel (Pvt) Ltd, S.P.Samy Investment Complex (Pvt) Ltd, United Merchant Ltd.

முன்னாள் தலைவர் - வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயம், தலைவர் - வடகொழும்பு இந்து பரிபாலனசபைச் சங்கம், முன்னாள் உபதலைவர் - அகில இலங்கை இந்து மாமன்றம், உபதலைவர் -  சேர் பொன்னம்பலம் அருணாசலம் நம்பிகை நிதியம், முன்னாள் தலைவர் - புறக்கோட்டை வர்த்தகர் சங்கம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - இராசம்மா தம்பதியினரி அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான மருதையா - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வீரலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சிவகுரு மற்றும் சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ராசபூபதி மற்றும் நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, யோகவதி, சிவமணி மற்றும் மங்கையற்கரசி, காலஞ்சென்ற பாலசிங்கம், ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

சாந்தினி, நந்தினி, கணேசராஜா, கேசவராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இளங்கோ, ரவிசங்கர், சாந்தி, அஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஸ்சுருதி, சுவாதி, அபிராமி, ஆரணி, கௌதம், அஸ்வினி, ஹர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-02-2025 வௌ்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

இல-44, செட்டித்தெரு லேன்,

நல்லூர், யாழ்ப்பாணம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2025 05:00)