திரு செல்லையா இராசலிங்கம்
(ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் நகரசபை - திருகோணமலை)
தோற்றம்: 25 ஜூன் 1939 - மறைவு: 12 பெப்ரவரி 2024
யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 118/7, பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராசலிங்கம் 12-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா - காமாட்சி தம்பதியினரின் பாசமிகு புத்திரனும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் - அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
இராசரத்தினம், இராசமணி, இந்திராணி, இந்துமதி, இராசலட்சுமி, இராசகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுபாஜினி (ஆசிரியர் - யா/நாவலர் மகா வித்தியாலயம்), நந்தகுமார் (மேற்பார்வை உத்தியோகத்தர், பிரதம தபாலகம் - யாழ்ப்பாணம்), சிவாஜினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம் மாநகர சபை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெங்காதரன் (முகாமையாளர் - கிளிநொச்சி மக்கள் வங்கி), சண்முகநாதன் (ஆசிரியர் - யா/கொக்குவில் இந்துக்கல்லூரி), நளாயினி (ஆசிரியர் - யா/கொக்குவில் மேற்கு சி.சி.த.க. பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வர்ஷாயினி, சிவாஞ்சலி, நிஜந்தன், துவாரகன், பிரசாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 11.30 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
முகவரி:-
இல- 118/7, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
www.tamilthakaval.org
