Mr. Sellaiah Thangarajah
Date of Birth: 02 September 1936 - Deceased: 19 August 2025
யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா - Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா தங்கராசா அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா - நாகம்மா தம்பதியினரின் அருமை மகனும்,
கணபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பராசக்தி (பவளம்), விஜயலக்சுமி (கனடா), காலஞ்சென்ற இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, படைவீரசிங்கம், மகேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபாகரன் (சுட்டி- பிரான்ஸ்), பாஸ்கரன் (கனடா), உதயகரன் (பிரித்தானியா), சிவபோகரன் (ஐக்கிய அமெரிக்கா), சிவமதி (பிரித்தானியா), சுதர்மதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தராணி (ஜெயா – பிரான்ஸ்), மீரா (கனடா), சுசி (பிரித்தானியா), நந்தா (ஐக்கிய அமெரிக்கா), சிவகுமார் (பிரித்தானியா), இரவீந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆஷா- சுகு, ஆகாஷ், ஆறுஜன், அஷ்விகா, பாருனி, அக்சவி, கெனிசா, சஜானி, வேதன், ரித்திக்கா, அஷ்மிதா, சாம்பவி, விதுஜன், பிரமிக்கா, அபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அய்ரா, அமீர் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 25-08-2025 திங்கட்கிழமை அன்று காலை 9:00 - 10:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
