Mrs Sellaiha Saraswathy

(செல்வம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் - வெதமுல்ல)

Sellaiha Saraswathy

Deceased: 28 February 2024

தென்னிந்தியா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாளுக்கா திருக்குழம்பூர், வெதமுல்ல ரம்பொடையைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லையா சரஸ்வதி அவர்கள் 28-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பம்பயன் - வௌ்ளையம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் - சிட்டு தம்பதியினரின் மருமகளும்,

திரு. செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வன் ரவிக்குமார் (கொரியா), திரு. பன்னீர்செல்வம், திரு. சிவக்குமார் (காலி), காலஞ்சென்ற மகேந்திரன், திருமதி சகுந்தலா தேவி, திருமதி சர்மிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திரு. செல்வராஜா (காலி), திரு. ராஜகுலேந்திரன் (குருகுல சூரிய-கண்டி), திருமதி. நிர்மலாதேவி, திருமதி. பத்மா ஆகியோரின் மாமியாரும்,

திரு.திருமதி A.P. சேதுராமன் சரஸ்வதி (New Lalitha Gold House, கிட்டங்கி-காலி), காலஞ்சென்றவர்களான தங்கராஜ் (தலவாக்கலை), சின்னையா பேச்சியம்மா (நாவலப்பிட்டி) மற்றும் திருமதி நாகலட்சுமி (Nadiyas Textiles), காலஞ்சென்ற கருப்பையா பொன்னழகு (New Favorites - நாவலப்பட்டி), திரு . திருமதி சொக்கலிங்கம் கமலா (சாந்தினி Gold House - காலி), திருமதி. இந்திராணி (P.K.R.Srores - இரட்டை பாதை), திருமதி. அகிலாண்டம் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல-05, பெய்லி வீதி, நாவலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-03-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று நாவலப்பிட்டி பவ்வாகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2024 05:00)