திரு. செல்லையா அச்சுதபாதசுந்தரம்

செல்லையா அச்சுதபாதசுந்தரம்

மறைவு: 09 ஆகஸ்ட் 2025

யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-34, முகாந்திரம் லேன், கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. செல்லையா அச்சுதபாதசுந்தரம் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்ற கலாஜினி (ராதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன், சுஜீவன், சுதாஜீவ், சுபராஜீவ், சுஜானிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஜபாமார்டீனா, விஜிதா, கஜாயினி ஆகியோரின் அன்ப மாமனாரும்,

சாரா, ஜெயதேவ், சனா, சிதானா, சிதான், ரீதீஸ், வைரவன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-08-2025 புதன்கிழமை  அன்று முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2025 04:00)