Miss. Selliah Pathmavathy

(முன்னாள் யாழ்ப்பாணம் பழைய சம்மந்தன் தனியார் மருத்துவமனை உரிமையாளர, நடத்துனர;)

Selliah Pathmavathy

Date of Birth: 22 November 1941 - Deceased: 01 July 2024

யாழ். காங்கேசந்துறை பளை, மிதியாவளை, குருவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. செல்லையா பத்மாவதி அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-மாருதப்புரவீகவள்ளி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி, மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், பொன்னம்பல மாப்பாண கதிர்காம முதலியார், திருமதி சித்திரா பாலகிருஷணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், Dr. ராமசாமி, சிவபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, ரட்ணபூபதி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

சிந்துஜா (பிரித்தானியா), லாவண்யா (பிரித்தானியா), நிரோக்ஷன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவரூபன், இளங்குமரன், சுகன்யா ஆகியோரின் அன்பு அன்ரியும்,

அபிநாத், அபிசயன், அபிசரண், நிவேன், காலஞ்சென்ற ஜதுஷா, ஜதிக்கா, அங்கித், முகிந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பார்வைக்கு வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2024 04:00)