திருமதி. செல்லையா செல்லம்மாள்

செல்லையா செல்லம்மாள்

தோற்றம்: 07 மார்ச் 1925 - மறைவு: 12 செப்டம்பர் 2025

இந்தியா - புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லையா செல்லம்மாள் அவர்கள் 12-09-2025 வௌ்ளிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா அவர்களின் துணைவியும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் மாமியும்,

செல்வம் அவர்களின் தாயாரும்,

சுமதி, புவனேஸ்வரன், அமர்நாத், சுபாசினி ஆகியோரின் பாட்டியும்,

ஷதுர்சன், ஹக்‌ஷித்தா, விசாகன், லக்‌ஷன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-622/5, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2025 04:00)