Mr. Chelliah Subramaniam
Date of Birth: 30 July 1956 - Deceased: 13 February 2025
யாழ். அராலி தெற்கு, வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், மாதகல் வேலுப்பிள்ளை கடை அம்பாள் வீதியையும், இலண்டன் -Canning Town வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லயா சுப்பிரமணியம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வனும், காலஞ்சென்ற ராசரத்தினம் (JP) - நாகரத்தினம் (இலண்டன்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி (இலண்டன்) அவர்களின் ஆருயிர் கணவரும்,
பாலச்சந்திரன் (இலண்டன்), ராசலட்சுமி (இலங்கை), விஜயலட்சுமி (UK), விவேகானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
அனுசியாதேவி (இலண்டன்), இரத்தினதேவி (இலங்கை), சியாமளாதேவி (டென்மார்க்), Dr. இராதாகிருஷ்ணன் (இலண்டன்), சாயீஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-02-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 - 14:30 மணி வரை Aldersbrook Bowls Club (34 Aldersbrook Road, Aldersbrook, London E12 5DY) இல் பார்வைக்காகவும் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தொடர்ந்து புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
