Mr Sellaiyya Sivanesan (Kingsly)

Sellaiyya Sivanesan (Kingsly)

Deceased: 16 May 2024

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாஹேன்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா சிவநேசன் அவர்கள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா - அழகுசுந்தரி தம்பதியினரின் புதல்வரும்,

காலஞ்சென்ற தில்லைநாயகம் - பாக்கியலஷ்மி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற சசிதேவி (முன்னாள் அதிபர் - கொழும்பு சைவமங்கையர் கழகம்) அவர்களின் அன்புக்கணவரும்,

சாரங்கன் (அமெரிக்கா), சேயோன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

யும் ஷாலட் (சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிவகுமாரி, கமலாசனி, நகுலேஸ்வரன், வசந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான மனோகரன், பாஸ்கரன், விக்னேஸ்வரன், இராஜேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 18-05-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2024 04:00)