Mr. Sellappa Balasingam

(Administrative Officer Local Government)

Sellappa Balasingam

Date of Birth: 05 December 1928 - Deceased: 10 June 2022

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பாலசிங்கம் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜேந்திரா (கனடா), திவாகரன் (கனடா), மஞ்சுளா (ஆசிரியை, சைவமங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவஞானதேவி (கனடா), யோகவதனி (கனடா), ஜெகப்பிரியன் (கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறிசித்தா, லகரன், யாழினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பரராஜசிங்கம் (கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சிவநேசன், சிவபாக்கியம், சிவமலர் மற்றும் சிவபாதம், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் அவார்.

அன்னாரின் பூதவுடல் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 02:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- மனைவி, பிள்ளைகள்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2022 00:30)