திரு செல்லப்பா சுந்தரேஸ்வரன்(வரன்,Building Contractor)

செல்லப்பா சுந்தரேஸ்வரன்(வரன்,Building Contractor)

மறைவு: 27 ஜூன் 2020

யூனியன் கல்லூரியின் வளர்ச்சியில் செல்லத்துரை மாஸ்டர்(New Jersey,USA) அமரர் பாலசிங்கம் மாஸ்ரருடன் சேர்ந்து எனது தந்தையாருக்குப் பக்கபலமாக இருந்த,தெல்லிப்பழைப் பழைய மாணவர்சங்கத்துடன் பல தசாப்தங்கள் தொடர்புடைய,வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும்,

மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.செல்லப்பா சுந்தரேஸ்வரன்(வரன்,Building Contractor) அவர்கள் 27-06-2020ம் திகதி சனிக்கிழமை அன்று மானிப்பாயில் தனது 68வது வயதில் இறைபதமடைந்தார்.

அன்னார் வீமன்காமத்தை சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா மற்றும் சிறுப்பிட்டி,புத்தூரை சேர்ந்த சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும்,

கேமலதாவின் அன்புக் கணவரும்(CTB),

வஜிதன்,நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தனலக்சுமி(யூனியன் கல்லூரி பழைய மாணவி),றாயலக்சுமி(யூனியன் கல்லூரி பழைய மாணவி),புவனேஸ்வரி,யூனியன் கல்லூரி பழைய மாணவி),றஜித்தா(JUC 91 O/L London,UK) றஜீவன்(JUC-UK),யசோதரன்(JUC,France),யசோதை(JUC,France),  

மகேஸ்வரன்(மகேசன்,யூனியன் கல்லூரி பழைய மாணவர்),றாயேஸ்வரன்( ராசன்-யூனியன் கல்லூரி பழைய மாணவர்),நோர்வேயில் வசிக்கும் மகேஸ்வரி (யூனியன் கல்லூரி பழைய மாணவி-முகுந்தனன் தாயார்,JUC 83 O/L 86 A/L Norway),

டென்மார்க்கில் வசிக்கும் காந்திமதி(யூனியன் கல்லூரி பழைய மாணவி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
 
அன்னார் எமது கல்லூரியின் புகழ் பூத்த விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர் பாலசிங்கம் மாஸ்டரின் நெருங்கிய நண்பரும்,கல்லூரித் தோழனும்,லயன்ஸ் கிளப் பன்னாட்டு தொண்டர் நிறுவனத்தின் பல செயற்பாபாடுகளுடன் நீண்ட தொடர்புமுடையவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
வஜிதன்(மகன்):-+94 77 264 8732
மனைவி-+94 21 225 5047,+94 77 614 6402
 
அன்னாரை இழந்து தவிக்கும் உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபகங்கள்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2020 06:24)