திருமதி. செல்லப்பா விசாலாட்சி
மறைவு: 14 நவம்பர் 2024
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லப்பா விசாலாட்சி அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு-சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை -வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, சிவபாக்கியம் (சாமியம்மா), பராசக்தி, புனிதவதி, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, கந்தையா, மனோன்மணி, சரவணமுத்து (கிளாக்கர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தில்லைநாதன், விஜயலட்சுமி, விமலகுமாரி, விக்கினேஸ்வரி, வசந்தகுமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மங்களநாயகி, சிவகுமாரன், தவராசா, ஜெயபாலன், அருள்மாறன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் புளியங்கூடலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
