திரு. செல்லப்பா அழகரட்ணம்
தோற்றம்: 26 ஏப்ரல் 1933 - மறைவு: 31 ஆகஸ்ட் 2025
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லப்பா அழகரட்ணம் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை - பராசக்தி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி (மலர்), இரத்தினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, குமாரசாமி, சரஸ்வதி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகம்மா, மகேஸ்வரி, தர்மலிங்கம், பத்மநாதன், நவரட்ணராஜா ஆகியோரின் மைத்துனரும்,
அகிலன், குமுதினி, விபுலன், கபிலன், குசேலன், சகிலன், கோகிலன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
கமலாதேவி, விக்னேஸ்வரன், வனஜா, கவிதா, சிபோசனா, மோகனா, அனுசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-09-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 04-09-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
