Mr. Sellappah Panchalingam
Date of Birth: 08 March 1942 - Deceased: 06 January 2025
யாழ். உரும்பிராய் கரந்தனைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, Markham - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லப்பா பஞ்சலிங்கம் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - இலக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - இரத்தினேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
மனோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாளன், சுகந்தினி, சுபாசினி, ரஜனி, தர்ஷனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதா, வசந்தன், கண்ணன், சுரேஷ், துசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுகன்யா, சகாணா, ஆதவன், கிருஷ்ணா, கோபிஷா, ஆதித்தன், கோபிஷான், அஸ்வினி, ஓவியா, தீபா, ஆதிஷான், கைலன், ஜோதி, ராஜுதன், தனந்தன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாய், தாரா ஆகியோரின் ஆசை தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஷ்வரி, தங்கமணி, மகாலிங்கம், சோதிலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-01-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
