திரு. செல்லத்தம்பி கந்தசாமி

(Retired Officer and Board of director Paranthan Chemicals co-operation)

செல்லத்தம்பி கந்தசாமி

தோற்றம்: 03 நவம்பர் 1939 - மறைவு: 21 பெப்ரவரி 2025

யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்தம்பி கந்தசாமி அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,

வேலாயுதபிள்ளை - கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சொர்ணகாந்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தஷாணி, திருமால், முரளிக்கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

K. V குகேந்திரன், விஜித்தா, ஹம்ஷவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜஸ்டின், தினேஷ், விதுஷா, ஜெயந்தன், பிரணயா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், கனகாம்பிகை மற்றும் சந்திரராணி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருக்குமார், செல்வகாந்தா, மகேந்திரன், நிர்மலா, மீனாம்பிகை, ஜெயரூபன், சாந்தினி, காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, முத்துக்குமாரசாமி, சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினகுமார், துர்க்கா ஆகியோரின் அன்புத் தாய் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:30 -10:00 மணி வரையும், 24-02-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 - 3:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2025 05:00)